< font color="white">All Tips

Saturday, 31 March 2018

எருக்கு

                                                        எருக்கு

                                    


     மருத்துவப்  பயன்கள்:
                                                         எருக்கு பொதுவாக காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. எருக்கு இலை வாந்தி உண்டாக்குதல்; பித்தம் பெருக்குதல்; வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.
எருக்கு பட்டை, பூ ஆகியவை கோழையகற்றும்; பசி உண்டாக்கும்; செரிப்பு உண்டாக்கும்; உடல் உரமாக்கும். எருக்கு பால் புண்களை ஏற்படுத்தும்.
எருக்கு நேராக வளரும் பாலுள்ள பெரிய புதர்ச்செடி. எருக்கின் இலைகள் அகன்று எதிர் எதிர் அடுக்கில் அமைந்ததுள்ளது. எருக்கு செடி முழுவதும் வெண்மையான மாவு படர்ந்தது போலக் காணப்படும்.
எருக்கு மலர்கள் பெரும்பாலும் கத்தரிப்பூ நிறமானவை. அரிதாக வெள்ளை நிறமான பூக்களுடன் காணப்படும். பச்சையான காய்களில் உள்ள விதைகள் மென்மையான வெள்ளைப் பஞ்சுடன் கூடியவை. இவை காற்றில் பறக்கக் கூடியவை.
எருக்கு இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் வளர்பவை. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே வளர்கின்றது.
வெள்ளெருக்கன் செடியின் வேரிலிருந்து விநாயகர் போன்ற சுவாமி விக்கிரகங்கள் செய்து வணங்குவார்கள். வெள்ளெருக்கன் வேர்க் கட்டை வீட்டில் இருந்தால் பூச்சிகள், விஷ வண்டுகள் வராது என்கிற நம்பிக்கை சார்ந்த நடைமுறையும் நமது மக்களிடையே உள்ளது.
பெரியவர்களுக்கான மருத்துவத்தில் மட்டுமே எருக்கு உள் மருந்தாக உபயோகிக்கப்படலாம்.
நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது எருக்கன் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக்கப்பட்ட குதிகாலை ஐந்து நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய குதிகால் வாதம் குணமாகும்.
எருக்கு பூ ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கிராம்பு அரைப் பங்கு சேர்த்து அரைத்து, மிளகு அளவு உருண்டையாக்கி, காய வைத்து, தேனில் 2 உருண்டைகள் கரைத்து சாப்பிட இரைப்பு நோய் கட்டுப்படும்.
வெள்ளெருக்கன் பூக்களை சேகரித்து, காம்பு உள் நரம்புகள் ஆகியவற்றை நீக்கி, சிறிது மிளகு சேர்த்து அரைத்து மிளகு அளவு மாத்திரைகளாக செய்து கொள்ள வேண்டும். இந்த மாத்திரையில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளைகள் தேனில் உரைத்து சாப்பிட மார்பில் கட்டிய கோழை வெளியாகும்.
எருக்கு இலையை வதக்கி இளஞ் சூட்டோடு வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து சீக்கிரமாக உடையும் அல்லது
நன்கு முதிர்ச்சியடைந்த எருக்கு செடியிலிருந்து பழுப்பான இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை அனலில் இட்டு வதக்கிச் சாறு பிழிந்து அத்துடன் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். இதனை வெளி உபயோகத்திற்கான பூசு மருந்தாக உபயோகிக்கலாம்.
உலர்த்தி பொடியாக்கிய எருக்கு இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் தடவ நாள் பட்ட புண்கள் குணமாகும்.
குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில் எருக்கு பாலைத் தடவ விஷம் இறங்கும்.
பல் நோய்,பல் சொத்தை குணமாக எருக்கு பாலைத் தொட்டு பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் பூசலாம்.
3 துளி எருக்கு இலைச்சாறு, 10 துளி தேன் விட்டு உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
எருக்கின் வேர் சூரணத்தை ஆமணக்கு எண்ணெய் விட்டு தடவி வர குஷ்ட நோய் கட்டுப்படும்.






சிறுகண்பீளை

                                                    சிறுக்கண்பீளை

                                       


       மருத்துவப்  பயன்கள்:
                                                               சிறுகண்பீளை முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும், பாண்டு, இரத்தச்சூடு (சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
சிறுகண்பீளை வேரை உட்கொண்டால் சிலவகை பாம்புக்கடி விஷம் மற்றும் வெறிநாய்க்கடி விஷம் குணமாவதாக நாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரகக் கல்லைக் கரைக்கும் தன்மை தற்போதைய உயர்நிலை ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுகண்பீளை சிறுசெடி ஆகும். சிறுகண்பீளை இலைகள், மாற்றடுக்கில் அமைந்தவை சிறியவை. சிறுகண்பீளை பூக்கள், சிறியவை, வெண்மையானவை, கொத்தானவை. இலைக் காம்புகளின் அருகில் அமைந்தவை. நிமிர்ந்து வளரும் தன்மையுடனோ தரையில் படர்ந்த வகையில் வளரும் தன்மையுடனோ காணப்படும்.
சிறுகண்பீளை செடிக்கு கற்பேதி, பொங்கல்பூ, சிறுபூளை, சிறுபீளை, கண்ணுப்பூளை ஆகிய பெயர்களும் உண்டு. தமிழகம் எங்கும் பயிரிடாத நிலங்கள், வேலிகள், ஏரிகள், குளக்கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் இயற்கையாக வளர்கின்றது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.
சிறுகண்பீளை


சிறுநீரகக் கற்கள் கரைய சிறுகண்பீளை முழுத்தாவரம் 50 கிராம், ஒரு லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராக சுண்டக் காய்ச்சி, 100 மி.லி. அளவில், காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்யலாம் அல்லது சிறுகண்பீளை முழுத்தாவரம் 50 கிராம், சிறு நெருஞ்சில், மாவிலங்க வேர், பேராமுட்டி வேர் சேர்த்து மொத்தம் 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி, 100 மி.லி.வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குடித்துவர வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்யலாம்.






நெருஞ்சில்

                                          நெருஞ்சில்


                                      



        மருத்துவப்  பயன்கள்:
                                                            நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; காமம் பெருக்கும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும்.
நெருஞ்சில் கனிகளில், நிலைத்த எண்ணெய், பிசின்கள் மற்றும் நைட்ரேட் உப்புகள் காணப்படுகின்றன. நெருஞ்சில் விதைகள், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு ஆகியவற்றைக் குணமாக்கும்.
நெருஞ்சில் தரையோடு படரும் செடி வகையைச் சார்ந்தது. நுண்ணிய மயிரிழைகளால் அடர்த்தியாக சூழப் பட்டிருக்கும். சுரீல் எனக் குத்தும் முட்கள் பொன் மஞ்சள் நிறமான மலர்களைக் கொண்டு நெருஞ்சிலை அடையாளம் கண்டறியலாம்.
நெருஞ்சில் இலைகள் சமமற்ற கூட்டிலைகளால் ஆனவை. தனி மலர்கள், இதழ்கள் பொன் மஞ்சள் நிறம். நெருஞ்சில் கனிகள் உறுதியான முட்களுடன் கூடியவை. ஐந்து பக்கங்களுடன் பத்து சமமற்ற முட்களைக் கொண்டது.
நெருஞ்சில் விதைகள் எண்ணிக்கையில் அதிகமானவை. நெருஞ்சில் சமவெளிப் பகுதிகள் கடற்கரை ஓரங்கள் சாலை ஓரங்களில் மழைக் காலத்தில் மிகவும் பரவலாக காணப்படும் ஒரு களைச் செடி. 3000 மீ உயரமான மலைப் பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றது.
சிறு நெருஞ்சில், திரிகண்டம், கோகண்டம் போன்ற மாற்றும் பெயர்களும் நெருஞ்சில் தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. நெருஞ்சில் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
நெருஞ்சில் 50 கிராம் அளவிற்கு சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு, 500 மி.லி. நீரில் போட்டு, பாதியாகச் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. வீதம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்க சிறுநீர்க் கடுப்பு குணமாகும்.
நெருஞ்சில் சூரணம் ½ கிராம் முதல் 1 கிராம், 1 டம்ளர் மோரில் கலந்து, தினமும் இரண்டு வேளைகள் குடித்துவர வெள்ளைப்படுதல் குணமாகும்.
நெருஞ்சில் முழுத்தாவரத்தையும் இடித்துப் பிழிந்த சாறு 50 மி.லி.யுடன், 1 டம்ளர் மோர் கலந்து குடிக்க சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்படும்.
நெருஞ்சில் விதைகளைப் பாலில் அவித்து, காயவைத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு, காலை, மாலை 1½ தேக்கரண்டி அளவு பாலில் கலந்து குடித்துவர ஆண்மை பெருகும்.
நெருஞ்சில் செடி 2, அருகம்புல் ஒரு கைப்பிடி, ஒரு லிட்டர் நீரில் நசுக்கிப்போட்டு, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில் 3 நாட்கள் வரை குடிக்க உடல் சூட்டால் ஏற்படும் கண்எரிச்சல். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
யானை      நெருஞ்சில்:
மழைக்காலத்தில், தரிசு நிலங்களில், மஞ்சள் நிறமான பூக்களுடன் வளர்ந்து காணப்படும் தாவரம். சாலை ஓரங்களிலும் அதிகமாகக் காணப்படும. இலைகள் சதைப்பற்றானவை. இதன் முட்கள் பெரியவை. தாவரம் முழுவதும் கொழகொழப்புத் தன்மை மிகுந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகின்றது.
யானை நெருஞ்சில் முழுத்தாவரமும் வெண்குஷ்டம், கல்லடைப்பு, உடல் எரிச்சல், நீர்வேட்கை மற்றும் உடல்சூடு காரணமாக ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்மைத் தன்மையும், விந்து சுரப்பையும் அதிகமாக்கும். வெள்ளைப்படுதல், வெட்டைச் சூட்டைக் குணப்படுத்தும்.
யானை நெருஞ்சில் இலையை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வெட்டைச் சூடு குறையும்.
யானை நெருஞ்சில் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மைய அரைத்து, ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து, காலையில் மட்டும் உட்கொள்ள வேண்டும். 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்ப்புல்

                                                             அருகம்புல்       
                                         
                                   

     அருகம்ப்  புல்   பயன்கள்:
                                                                                                அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட புல்வகையைச் சார்ந்த சிறுசெடியாகும். உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீரைப் பெருக்கும், உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை ஆற்றும்.
அருகம்புல் பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகளை தாவரம் முழுவதிலும் கொண்டுள்ளது. அருகம்புல் தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும்.
வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அருகம்புல் வளர்கின்றது. அருகு, பதம், தூர்வை, மேகாரி ஆகிய தமிழ்ப் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு.
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வர வெள்ளைப்படுதல் நோய் தீரும்.
தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும், ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும்.
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து, 200 மி.லி. காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து, காலை வேளையில் மட்டும் இரண்டு வாரங்கள் ‍தொடர்ந்து குடித்துவர மூலம், இரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும்.
எலுமிச்சம்பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து, காலை வேளையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்தால் வெட்டை நோய் குணமாகும்.
அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி. ஆகியவற்றுடன் ½ தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் குணமாகும்.
மருத்துவ உபயோகத்திற்கான‌ அருகம்புல் சுத்தமான வாழித்திலிருந்து மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும். தொடர்ந்து அருகம்புல் கிசாயம் அல்லது சாறு சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாவதுடன் கண் பார்வையும் தெளிவடையும்.
அருகம்புல்லின் இலைப் பச்சையத்தில் உள்ள அபரிமிதமான கரோட்டினாய்டுகளால் மேற்கூறியவாறு நோய்களை தீர்க்க‌ அருகம்புல் உபயோகமாகின்றது.
அருகம்புல் பசையை வெட்டுக் காயங்களின் மீது பூசிவர அவை விரைவில் குணமாகும். விநாயகர் வழிபாட்டிற்கு அருகம்புல் உகந்ததாக நமது நாட்டு மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.






சங்குப் பூ

                                  சங்குப்  பூ
         
                                  



    மருத்துவப்  பயன்கள்:
                                                           சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது.
சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது.பச்சையான கூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும் உடையது. தட்டையான காய்களை உடையது.

சங்குப்பூ
சங்குப்பூ

சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.
40கிராம் சங்குப்பூ வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராக காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 6 முறைகள் ஒரே நாளில் சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
சங்குப்பூ வேர், கீழா நெல்லி முழுத் தாவரம், யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், இவை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடியுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவாக தயிரில் கலக்கி உட்கொள்ள வேண்டும். காலையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட வெள்ளை படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
பேதியாக சங்குப்பூ வேர் 10 கிராம், திப்பிலி 10 கிராம், சுக்கு 15 கிராம், விளாம் பிசின் 10 கிராம் ஆகியவற்றைக் கல்வத்தில் அரைத்து குன்றி மணி அளவான மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 1 மாத்திரை வீதம் காலை வேளையில் உள்ளுக்குள் வெந்நீருடன் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவாகும்.
பேதியைக் கட்டுப் படுத்த மோர் அல்லது எலுமிச்சம் பழச் சாறு குடிக்கலாம்.
தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.
நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும்.
யோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம். பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும்.

ஓரிதழ்த் தாமரை

                                ஓரிதழ்   தாமரை

                              


   மருத்துவப்  பயன்கள்:
                                                         ஓரிதழ்த்தாமரை ஒரு காயகல்ப மூலிகையாகும். முழுத்தாவரம் உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும். சீதபேதியை நிறுத்தவும், மேகநோய்களுக்கான மருத்துவத்திலும் ஓரிதழ்த்தாமரை பரவலாகப் பயன்படுகின்றது. இளைத்த உடலைப் பலப்படுத்துவதற்கான மாத்திரைகள், டானிக்குகளில் ஓரிதழ்த்தாமரை சேர்க்கப்படுகின்றது.
ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகளிலும் பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் காணப்படும். ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. ஒரே இதழுடன் உள்ள, சிவப்பு ரோஜா இதழ் நிறமான பூக்களைக் கொண்டது. பெரும்பாலும் ½ அடிக்கும் குறைவான உயரமே வளரும்.
இந்திய மருத்துவத்தில், சூர்யகாந்தி, ரத்தினபுருஷ் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஓரிதழ்த்தாமரை தாவரத்திற்கு உண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானாகவே வளர்கின்றது. ஓரிதழ்த்தாமரை இலைகளை வாயிலிட்டு மெல்ல, அவை கொழகொழப்பான பசைபோல மாறும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
முழுத்தாவரத்தையும் பசுமையானதாகப் பறித்து, பசையாக்கி, எலுமிச்சம்பழ அளவு தினமும், 1 டம்ளர் காய்ச்சாத பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி, குடித்துவர வேண்டும். 48 நாட்கள் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய நரம்புத் தளர்ச்சி, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக ஓரிதழ்த்தாமரை இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகியவற்றைச் சமமாக, மொத்தத்தில் ஒருபிடி அளவு எடுத்து, அரைத்துப் பசையாக்கி, 1 டம்ளர் தயிருடன் சேர்த்துக் கலக்கி, காலையில் மட்டும் குடித்துவர வேண்டும். 10 நாட்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்யலாம். இந்தக் காலத்தில், காரம், புளிப்பு அதிகம் இல்லாத உணவாக உட்கொள்ள வேண்டும்.
புண்கள், காயங்கள் குணமாக ஓரிதழ்த்தாமரை முழுத் தாவரத்துடன் பச்சைக் கற்பூரம், கோரோசனை ஆகியவற்றைச் சிறிதளவு கலந்து, பசையாக்கி, நெய்யுடன் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
‘தாதுவையுண்டாக்குந் தனிமேகத்தைத் தொலைக்கும்…. ஓரிதழ்த் தாமரையையுண்” இளவயதில் கட்டுக்கடங்காத காம நினைவுகளால் உடல் மெலிந்துபோன இளைஞர்களின் ஆரோக்கியத்தை மீட்கும் தகுதி ஓரிதழ்த்தாமரைக்கு உள்ளதென நமது மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஓரிதழ்த்தாமரை தாவரத்தில் செய்யப்பட்ட முதல்நிலை ஆய்வுகளிலிருந்து, இது ஆண்களுக்கு விந்துச்சுரப்பைத் தூண்டி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி, தாம்பத்திய உறவிலும் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.


நன்னாரி

                                              நன்னாரி 

                               
         
     மருத்துவ    பயன்கள்:
                                                           நன்னாரி வேர் இனிப்பும், சிறு கசப்பும் சேர்ந்த சுவையானது. குளிர்ச்சியான தன்மை கொண்டது. வியர்வை, சிறுநீர் ஆகியவற்றைப் பெருக்கும்; தாது வெப்பத்தை அகற்றும்; உடலைத் தேற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; வண்டு கடி, நீரழிவு, கிரந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.
                          நன்னாரி கொடி வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்கில் குறுக்கு மறுக்காக அமைந்த நீளமான அகலத்தில் குறுகிய இலைகளைக் கொண்டது. கம்பி போன்ற வளைந்து படரும். நன்னாரி மலர்கள், மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு நிறமானவை. நன்னாரி செடிச்சாறு பால் போன்றது. நன்னாரி வேர்கள் நறுமணமுள்ளவை. மருத்துவத்தில் பயன்படுபவை.
                         நறுக்கு மூலம், நறுநீண்டி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, கிருஷ்ணவல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் நன்னாரி தாவரத்திற்கு உண்டு. நன்னாரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே விளைகின்றது. சமவெளிகள், முட்புதர் காடுகள் மற்றும் கடற்கரையோரங்களில் அதிகமாகக் காணப்படும்.
                         மலைப் பகுதியில் வளரும் நன்னாரியின் வேர் தடிப்புடன் பெரியதாக இருக்கும். நன்னாரி வேரின் மருத்துவ உபயோகம் மற்றும் நறுமணப் பயன்கள் கருதி பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. இது காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
                         ஒரு பிடி பசுமையான நன்னாரி வேரைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு, இடித்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து இரசம் வைக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை சேர்த்து, வெறும் வயிற்றில் ½ டம்ளர் அளவு இரசத்தை குடிக்க எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாகும்.
                          நன்னாரி வேர்த்தூள் 2 தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடிக்க சிறுநீர் கட்டு குணமாகும்.
                          நன்னாரி வேர்த்தூள் ஒரு பங்குடன் 25 பங்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை 50 பங்கு சேர்த்து மணப்பாகு செய்து 15 முதல் 25 மிலி வீதம் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.
                          பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கி குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.
                         நன்னாரி இரு வகைப்படும். வேர்கள் சிறியதாக உள்ள சிறு நன்னாரியின் பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைகள் அகலத்தில் குறுகியவை. சமவெளிகள், புதர்காடுகளில் வளர்பவை.
                          மற்றொரு வகை, வேர்கள் பெரியதாக உள்ள பெரு நன்னாரியின் மலர்கள் கருஞ்சிவப்பு நிறமானவை. இலைகள் அகலத்தில் அதிகமானவை. மலைப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வளர்கின்றன.





நாயுருவி

                                                                   நாயுருவி          

                             


       மருத்துவப்    பயன்கள்:
                                                          நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்.
நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும்.
நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும்.
நாயுருவி அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய சிறுசெடி. நாயுருவி இலைகள் முட்டை வடிவமானவை, எதிரடுக்கிலே அமைந்தவை. நாயுருவி தண்டுகள் பட்டையானவை, நாயுருவி மலர்க்கொத்துகள் நீண்டவை. நுனியிலோ கிளைகளிலோ காணப்படும். மலர்கள் சிறியவை. இருபால் தன்மையானவை.
நாயுருவி விதைகள், அவற்றைச் சூழ்ந்துள்ள சிறு முட்களுடன் எளிதில் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மையானது. தமிழகமெங்கும், தரிசு நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஈரப்பாங்கான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி ஆகிய மாற்றுப் பெயர்களும் நாயுருவி தாவரத்திற்கு உண்டு. நாயுருவி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. நாயுருவியை எரித்தால் கிடைக்கும் சாம்பலில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது.
மலைப்பகுதியில் வளரும் செடிகள் சிவப்பான தண்டுகளுடன், சிவந்த இலைகளுடன் காணப்படும். இவற்றுக்கு செந்நாயுருவி அல்லது படருருக்கி என்கிற பெயர் உண்டு.
நாயுருவி வேரை நீரில் கழுவி, சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூளால் பல் துலக்கி வரலாம் அல்லது பச்சை வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அதனால் (வேப்பங்குச்சியால் பல்துலக்குவது போல) பல் துலக்கி வர பற்கள் உறுதியடையும்.
நாயுருவி வேர் மற்றும் தண்டுகளை நிழலில் காயவைத்து, இடித்துத் தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தேவையான அளவு வெந்நீரில் குழப்பி, பசையாக்கி, முகத்தில் பூசிவர முகம் பொலிவடையும்.
10 கிராம் நாயுருவி இலைகளை அரைத்து, பசையாக்கி, 10 மி.லி. நல்லெண்ணெயுடன் கலந்து குழப்பி சாப்பிட வேண்டும். காலை, மாலை வேளைகளில் 10 நாட்கள் வரை சாப்பிட இரத்த மூலம் குணமாகும்.
நாயுருவி வேர்த்தூள் ½ முதல் 1 கிராம் வரை வெந்நீரில் சாப்பிட்டு வர உடல் பலமடையும்.
நாயுருவி வேர் அல்லது இலையை அரைத்து பசையாக்கி, மேல் பூச்சாகப் பூச கொப்புளம், சிரங்கு குணமாகும்.

பூஷன் முத்திரை

                                பூஷன்    முத்திரை
         
                                         



செய்முறை:
                                 பூஷன்” என்றால் “சூரியன்” என்று அர்த்தம். இந்த முத்திரை இரண்டு கைகளிலும் இரண்டு விதமாக செய்யவேண்டும்.
அதாவது வலது கையின் ஆள்காட்டி விரல், மற்றும் நடு விரலின் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.
இடது கையின் நடு விரல், மற்றும் மோதிர விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற ஆள்காட்டி விரலும் சிறுவிரலும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும். உணவு சாப்பிட்டபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

இந்த முத்திரை பயிற்சியால் நிலம் காற்று ஆகாயம் பஞ்சபூத சக்திகள் நமது உடலுக்கு அதிகம் கிடைக்கிறது. அதாவது ஒரு கையால் சக்தி பெறப்பட்டு மற்றொரு கையால் சக்தி உடலுக்கு  கொடுக்கப்படுகிறது.   

பலன்கள்:
                        இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
உடல் உள் உறுப்புகளில் இருக்கும் நஞ்சு (TOXIN) என்று சொல்லப்படும் கெட்ட கழிவுகள் வெளியேறுகிறது.காற்று சக்தி அதிகம் கிடைப்பதால் நாம் சுறுசுறுப்பாக இயங்கமுடியும்.நிலத்தின் சக்தி அதிகம் கிடைப்பதால் நமது உடலின் எலும்பு மற்றும் தசைகள் நன்றாக சக்தியுடன் பலமடைகிறது.
நுரையீரல் நன்றாக வேலை செய்து ஆக்ஸிஜனை அதிகமாக பெற்றும் கார்பண்டையாக்ஸைடை முழுவதும் வெளியேற்றியும் நுரையீரல் அதிக சக்தி பெறுகிறது.உடல் உறுப்புகள் வயிறு, கல்லீரல், மன்னீரல், பித்தப்பை சக்தி பெற்று நன்றாக வேலை செய்கிறது. நரம்புகள் வலுவடைந்து நரம்பு தளர்ச்சி நீங்குகிறது.குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் வாயுக்கோளாறுகளை நீக்குகிறது.
வயிறு மற்றும் குடல்கள் சக்தி பெற்று அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து இந்த முத்திரை பயிற்சி செய்தால் நமது உணவு நன்றாக ஜீரணமாகிறது.                           
    
Read  English:
                            Pushan Mudra    

காம ஜெய முத்திரை

                                      காம   ஜெய    முத்திரை




    பலன்கள்:

                                           அதீத காம சிந்தனை மற்றும் அதீத புணர்ச்சியால் விந்து விரயமாவதை குறைக்கவும் காம எண்ணங்களை குறைக்கவும் இந்த காம ஜெய முத்திரை பயன்படுகிறது இதனால் காமம் அடக்கபடுவதில்லை அதற்கு பதிலாக இது காமத்தை உண்டாக்கும் சக்தியை ஆன்மீக சக்தியாக உருமாற்றுகிறது மின்சார சக்தி வெப்ப சக்தியாக ஒளி சக்தியாக காந்த சக்தியாக மாறுவதை iron box, Tube light, Fan, motor ஆகியவற்றில் பார்த்திருப்பீர்கள் அது போல இது ஆன்மீக உயர்வுக்கு தேவைப்படும் சக்தியாக உருமாறுகிறது

மேலும் ஜீரண மண்டல செயல்பாட்டை ஊக்குவிக்கிறது நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின் சக்திகளை உடல் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது படம் தெளிவாக உள்ளதால் செய்முறை விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்
                

Friday, 30 March 2018

காற்று முத்திரை (ஃப்பிரித்வி முத்திரை)

                                காற்று     முத்திரை
                            
                              

       
    செய்முறை:
                                சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.

      பலன்கள்:
                                 மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
 கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis), வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும். நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து, தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான வாயுவை குறைக்கிறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

Read   English:
                            Vayu Mudra

பூமி முத்திரை

                                                         பூமி      முத்திரை
                
                                            


           செய்முறை:
                                           பூமி முத்திரை என்றும் சொல்லப்படும். மோதிர விரல் நுனியால் கட்டைவிரலை தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

                   பலன்கள்:
                                            மண்ணின் சக்தி அதிகமாகும் போது நமது எலும்புகள் கார்டியாலஜ், தோல், தலைமுடி, நகம், தசைகள், உள் உறுப்புகள் அனைத்தின் சக்தியும் அதிகரிக்கிறது உடலின் சக்தியும் அதிகரிக்கிறது. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கிறது.
                             
 உடல் பலவீனமாக உள்ளவர்கள் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் இம்முத்திரையைத் தொடர்ந்து ஒரு நாளில் 30 நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சினை போய் எடை குறைய தினமும் காலையும் மாலையும் 10 அடிக்கு நடைப்பயிற்சியும், இயற்கை உணவும், நில முத்திரை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடங்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும். இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது.
                                         
                                                                             
Read  English:
                           prithvi mudra

ஆகாய முத்திரை

                                ஆகாய      முத்திரை

                                   
     செய்முறை:
                                   தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம்.ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது.
ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.
                                                        
                                                   கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.  

      பலன்கள்:

                                 பயணங்களால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, ஜெட்லாக் காதுவலி, காது இரைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                               வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும்.
பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                             மன அழுத்தம் குறைய இரு வேளையும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                           அதிக நேரம் ஹெட் செட், தொலைபேசி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                         காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்னைகளுக்கு முதலுதவிபோல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.

                                        வெர்ட்டிகோ, தள்ளாட்டம், நிலை தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஒருமாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால் தாடையில் ஏற்படும் பிடிப்பு (Lock jaw) ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும்.

                                        குழந்தைகள், வயோதிகர், இதயநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் இதயப் படபடப்பு, முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம் ஆகியவை மட்டுப்படும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறைய 2-5 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

                                      தினமும் இரு வேளை ஐந்து நிமிடங்கள் செய்ய, எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்னை தடுக்கப்படுகிறது.

                                    அதீத உற்சாகம், அதிக துக்கம், கவலை, பயம், அதிக படபடப்பு, அதிக சிந்தனை கட்டுக்குள்வர இந்த முத்திரை உதவும்.
                                 
     Read   English:
                                 Aakash Mudra




சுரபி முத்திரை

                               சுரபி    முத்திரை

                                           


               செய்முறை:
                                                                விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.
நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.
இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.
இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

               பலன்கள்:
                                    * அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்
.
                                                      * தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.

                                                      * ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.
                                                      
                                                      * செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
           
               

Read  English:
                            Surabhi Mudra

பைரவி முத்திரை

                              பைரவி     முத்திரை

                                     
             
   செய்முறை:
                                                                         

                                ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து போது இந்த முத்திரை இயக்கப்பட வேண்டும்.இடது மேல் கால்கள் மற்றும் வலது கை மீது ஒய்வு இரண்டு கைகளையும் வைத்து. உள்ளங்கையில் மேல்நோக்கி எதிர்கொள்ளும் வேண்டும் மற்றும் விரல்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அது ஆத்மா ஞானம் மேலே வெளிச்சம் பிரதிபலிக்கிறது என்ற இந்த முத்ரா இந்து மதம், புத்த மற்றும் ஜைன உருவத்தின் காணப்படுகிறது.


பயன்கள்:
                          கல்விக்கு பயன் அளிக்கவும், உடல் ஆரோக்கியம் தரவும் இம்முத்திரை பயன்படுகிறது. ஸ்வாதிஷ்டான சக்கரத்தை தூண்ட வல்லது இது. நீரிழிவுநோயால் ஏற்படும் அதிக பசி, தாகம் போன்றவை குறையவும், சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம் நன்கு செயல்படவும் இம்முத்திரை பயன்படுகிறது.

Read    English:
                              Bhairava Mudra


Thursday, 29 March 2018

பூனைக்காலி

                                பூனைக்காலி


                                                    


    மருத்துவ  பயன்கள்:
                                                            
               பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது.

                                                     1.பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்து சூரணம் செய்து கொண்டு ஐநூறு மி.கிராம் ஆயிரம் மி.கிராம் அளவு வரை திணந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்.                                                                                                                                                2. பூனைக் காலி விதை, சுக்கு, திப்பிலி மூலம், கிராம்பு, கருவாப்பட்டை, வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை, பூனைக்கண் குங்கிலியம் இவைகளை குறிப்பிட்ட அளவு எடுத்து சூரணம் செய்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் காலை, மாலை இரு வேளை ஒருமாத்திரை வீதம் உண்டு வர வயிற்றுப்புழு, குன்மம், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.                                                                                                               3. உடல் வன்மை குறைந்தவர்கள் பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு, ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வரை கால், மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.                                                                                                                                                                           4.  பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை இவற்றுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு, முள் இலவு, நெல்லி இவைகளின் வேரையும் எடுத்து, உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். சீந்தில் சர்கரை, கற்கண்டு, மேற்கண்ட பொடி இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாக க்கலந்து அதிலிருந்து ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வீதம் நெய்யுடன் கலந்து காலை, மாலை இருவேளை உண்டு வர ஆண்மை பெருகும்.



ருத்ர முத்திரை

                          ருத்ர     முத்திரை

                                       


  

செய்முறை:


காம உணர்சிகளை அதிகரிக்க உறுதுணை புரியும் ருத்ர முத்திரை.
படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

                                                                                                      
                                          கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
                                     தந்த்ரா என்பதில் உள்ள "தந்" உடலிலுள்ள சக்தியையும், "த்ரா", அதைக்கடத்தும் தன்மையையும் குறிக்கும். தாந்திரீகத்தில்நாபி முக்கிய இடம்பெற்றது. சிவ சம்ஹிதையில் நாபிச்சக்கரத்தின் முக்கியத்துவம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பெருவிரல், சுட்டு விரல், மோதிர விரலின் நுனியை ஒன்றாகச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டியபடி வைக்கவும். இவ்வாறு 20 நிமிடம் இந்த முத்திரையை செய்ய வேண்டும்

                                                                                                                                             பலன்கள்:                                                                                                                                                         

                                       இம்முத்திரை தாம்பத்தியத்திற்கு உறுதுணையாய் இருக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, எதிர்ப்பு சக்தியைத் தரும். குறைந்த ரத்தஅழுத்தம்,மயக்கம், இதயக் கோளாறுகளை நீக்கும். சோர்வாக இருக்கும்போது இதை செய்தால் சோர்வு நீங்கி உடனடியாகப் புத்தணர்ச்சி கிட்டும்.

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.


Read  English:
                            Rudra Mudra