< font color="white">All Tips
Showing posts with label cooking. Show all posts
Showing posts with label cooking. Show all posts

Saturday, 7 April 2018

Mutton Chenna Masala

                             Mutton    Chenna    Masala

                                       
    

தேவையான   பொருட்கள்:

மட்டன்-1/2  கிலோ (சிறிய  துண்டாக  நறுக்கவும்)
சோம்பு-1 டீஸ்பூன்
கசகசா-2  டீஸ்பூன்
முந்திரி-50  கிராம்
இஞ்சி-50  கிராம்
பூண்டு-50  கிராம்
மிளகாய்த்  தூள்-4 டீஸ்பூன்
மல்லித்துள்-4  டீஸ்பூன்
கொண்ட  கடலை-200  கிராம்
தக்காளி-150  கிராம்
மல்லிஇலை- சிறிது
கறிவேப்பிலை-சிறிது
சாம்பார்   வெங்காயம்-150 கிராம்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை:
                            முதலில்   கொத்துக்கறியையும்   ஊறவைத்த   கொண்டை கடலையையும்   நன்கு   வேக     வைக்கவும்.பின்பு  சோம்பு,இஞ்சி,பூண்டு,முந்திரி,கசகசா    எல்லாவற்றையும்   வெண்ணை   போல்   அரைக்கவும்.பின்னர்  அந்த   அரவையுடன்     வெங்காயம்,மிளகாய்த்தூள், மல்லித்தூள்   கலந்து  அரைக்கவும்.பின்னர்   அடுப்பில்   வானலியை   வைத்து   நறுக்கிய   வெங்காயம்,கறிவேப்பிலை  போட்டு  சிவக்க  வதக்கவும்.பின்னர்  மசாலா  விழுதை   போட்டு  மசால்,தக்காளி  வாசனை  போகும்  வரை  வதக்கி   பின்னர்  கொத்துக்  கறியையும்    கொண்டகடலையையும்    போட்டு   கெட்டியாகும்   வரை    அடுப்பில்   வைக்க   வேண்டும்.




Thursday, 5 April 2018

Cheken Fry

                                   Cheken   Fry

                                              



 தேவையான    பொருட்கள்:
    சிக்கன்-1/2  கிலோ  (எழும்பு   இல்லாதது)
    இஞ்சி-50  கீராம்
    பூண்டு-10 பல்
    மஞ்சள்:1  டீஸ்பூன்
    காய்ந்த  மிளகாய்  பொடி-4 டீஸ்பூன்
   குடைமிளகாய்-1/4  கீலோ
   வெண்ணை-50 கிராம்
   எண்ணெய்-100 கிராம்
   உப்பு-தோவைக்கேற்ப
   கறிவேப்பிலை-சிறிது

செய்முறை:
                             சிக்கனை  நன்றாக   கழுவ   வேண்டும்.
பின்னர்  இஞ்சி,பூண்டு,மிளகாய்  பொடி,    மஞ்சள்  பொடி   சேர்த்து   அரைக்கவும்.பின்னர்  இஞ்சி,
பூண்டு விழுதை  சிக்கனோது  சேர்த்து  வெண்ணை  சேர்த்து  1மணி நேரம்  ஊற    வைக்கவும்.பின்னர்  வானலியை   அடுப்பில்   வைத்து  எண்ணெய் ஊற்றி  அரிந்து   வைத்த  குடை   மிளகாயைப்   போட்டு  நன்கு   வதக்கவும். பின்னர்  ஊறிய   சிக்கனை   எண்ணெயில்   போட்டு  மூடி   வைக்கவும். நன்கு  வதக்கி  லேசான   தீயில்   வைத்து   இறக்கவும்.












Tuesday, 3 April 2018

கோபி மஞ்சூரியன்

                                           கோபி  மஞ்சூரியன்

                                                                  




                              கோபி மஞ்சூரியன் என்பது காலிபிளவரைக் கொண்டு செய்யகூடிய உணவு வகை என்பது எல்லோரும் அறிந்ததே. இது கிரேவியாகவும், டிரையாகவும் செய்யப்படுகிறது.
இனி வீட்டில் எளிய முறையில் சுவையான கோபி மஞ்சூரியன் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காலிபிளவர் – 1 பூ (மீடியம் சைஸ்)
குடைமிளகாய் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
கடலை மாவு – ¼ கிலோ
பச்சரிசி மாவு – 3 ஸ்பூன்
கார்ன்பிளார் மாவு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு
பல்லாரி வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 2 எண்ணம் (பெரியது)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
வெள்ளைப் பூண்டு – 6 பற்கள் (பெரியது)
கறிவேப்பிலை – 3 கீற்று
கொத்தமல்லி இலை – 7 கொத்து
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

செய்முறை

முதலில் காலிபிளவர் பூவினை இதழ்களாக ஒடித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு உப்பினைச் சேர்த்து அடுப்பினை அணைத்து விடவும்.
இப்போது இதழ்களாக ஒடித்து வைத்துள்ள காலிபிளவரை தண்ணீரில் சேர்த்து பாத்திரத்தை மூடி விடவும். 10 நிமிடங்கள் கழித்து காலிபிளவர் இதழ்களை தண்ணீரை விட்டு வெளியே எடுத்து விடவும்.
வெந்நீரில் நனைத்த காலிபிளவர் இதழ்கள்
வெந்நீரில் நனைத்த காலிபிளவர் இதழ்கள்

பல்லாரி வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியைக் கழுவி மிக்ஸியில் போட்டு மையமாக அரைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயையும் அலசி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளைப்பூண்டினை தோலுரித்து குறுக்கு வாக்கில் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும்.
மல்லி இலையை ஆய்ந்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குடைமிளகாயையும் அலசி சிறுசிறு சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கார்ன் பிளார் மாவினை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைசலாகக் கரைத்துக் கொள்ளவும்.
கடலை மாவு, பச்சரிசி மாவு, தேவையான உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து வடைமாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வடைமாவுப் பதத்தில் கடலை மாவு கலவை
வடைமாவுப் பதத்தில் கடலை மாவு கலவை

வாணலியில் தேவையான எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காலிபிளவர் இதழ்களை வடைமாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுக்கப்பட்ட காலிபிளவர் இதழ்கள்
பொரித்தெடுக்கப்பட்ட காலிபிளவர் இதழ்கள்

வாயகன்ற பாத்திரத்தில் 5 ஸ்பூன் நல்லெண்ணை விட்டு அதில் சதுரங்களாக நறுக்கிய பல்லாரி வெங்காயம், குறுக்குவாக்கில் நறுக்கிய வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

வெங்காயம் பாதிபதம் வெந்த பின் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய குடைமிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
குடை மிளகாய் சேர்த்ததும்
குடை மிளகாய் சேர்த்ததும்

இரண்டு நிமிடம் கழித்து தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
தக்காளிச் சாறு சேர்த்ததும்
தக்காளிச் சாறு சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து பச்சை மிளகாய் சாறு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் கார்ன்பிளார் கரைசலைச் சேர்க்கவும்.
கார்ன்பிளார் கரைசலைச் சேர்த்ததும்
கார்ன்பிளார் கரைசலைச் சேர்த்ததும்

அரைநிமிடத்தில் பொரித்து வைத்துள்ள காலிபிளவர் வடைகளைச் சேர்க்கவும்.
பொரித்த‌ காலிபிளவர் இதழ்கள் சேர்க்கும் முன்
பொரித்த‌ காலிபிளவர் இதழ்கள் சேர்க்கும் முன்

காலிபிளவர் வடைகளைச் சேர்த்த பின்
காலிபிளவர் வடைகளைச் சேர்த்த பின்

கலவையை ஒரு சேரக் கிளறிவிட்டு, அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பினை அணைத்து விடவும்.
கொத்தமல்லி இலைகள் சேர்த்ததும்
கொத்தமல்லி இலைகள் சேர்த்ததும்

சுவையான கோபிமஞ்சூரியன் தயார்.