< font color="white">All Tips

Tuesday, 3 April 2018

கோபி மஞ்சூரியன்

                                           கோபி  மஞ்சூரியன்

                                                                  




                              கோபி மஞ்சூரியன் என்பது காலிபிளவரைக் கொண்டு செய்யகூடிய உணவு வகை என்பது எல்லோரும் அறிந்ததே. இது கிரேவியாகவும், டிரையாகவும் செய்யப்படுகிறது.
இனி வீட்டில் எளிய முறையில் சுவையான கோபி மஞ்சூரியன் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காலிபிளவர் – 1 பூ (மீடியம் சைஸ்)
குடைமிளகாய் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
கடலை மாவு – ¼ கிலோ
பச்சரிசி மாவு – 3 ஸ்பூன்
கார்ன்பிளார் மாவு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு
பல்லாரி வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 2 எண்ணம் (பெரியது)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
வெள்ளைப் பூண்டு – 6 பற்கள் (பெரியது)
கறிவேப்பிலை – 3 கீற்று
கொத்தமல்லி இலை – 7 கொத்து
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

செய்முறை

முதலில் காலிபிளவர் பூவினை இதழ்களாக ஒடித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு உப்பினைச் சேர்த்து அடுப்பினை அணைத்து விடவும்.
இப்போது இதழ்களாக ஒடித்து வைத்துள்ள காலிபிளவரை தண்ணீரில் சேர்த்து பாத்திரத்தை மூடி விடவும். 10 நிமிடங்கள் கழித்து காலிபிளவர் இதழ்களை தண்ணீரை விட்டு வெளியே எடுத்து விடவும்.
வெந்நீரில் நனைத்த காலிபிளவர் இதழ்கள்
வெந்நீரில் நனைத்த காலிபிளவர் இதழ்கள்

பல்லாரி வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியைக் கழுவி மிக்ஸியில் போட்டு மையமாக அரைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயையும் அலசி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளைப்பூண்டினை தோலுரித்து குறுக்கு வாக்கில் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும்.
மல்லி இலையை ஆய்ந்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குடைமிளகாயையும் அலசி சிறுசிறு சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கார்ன் பிளார் மாவினை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைசலாகக் கரைத்துக் கொள்ளவும்.
கடலை மாவு, பச்சரிசி மாவு, தேவையான உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து வடைமாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வடைமாவுப் பதத்தில் கடலை மாவு கலவை
வடைமாவுப் பதத்தில் கடலை மாவு கலவை

வாணலியில் தேவையான எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காலிபிளவர் இதழ்களை வடைமாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுக்கப்பட்ட காலிபிளவர் இதழ்கள்
பொரித்தெடுக்கப்பட்ட காலிபிளவர் இதழ்கள்

வாயகன்ற பாத்திரத்தில் 5 ஸ்பூன் நல்லெண்ணை விட்டு அதில் சதுரங்களாக நறுக்கிய பல்லாரி வெங்காயம், குறுக்குவாக்கில் நறுக்கிய வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

வெங்காயம் பாதிபதம் வெந்த பின் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய குடைமிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
குடை மிளகாய் சேர்த்ததும்
குடை மிளகாய் சேர்த்ததும்

இரண்டு நிமிடம் கழித்து தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
தக்காளிச் சாறு சேர்த்ததும்
தக்காளிச் சாறு சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து பச்சை மிளகாய் சாறு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் கார்ன்பிளார் கரைசலைச் சேர்க்கவும்.
கார்ன்பிளார் கரைசலைச் சேர்த்ததும்
கார்ன்பிளார் கரைசலைச் சேர்த்ததும்

அரைநிமிடத்தில் பொரித்து வைத்துள்ள காலிபிளவர் வடைகளைச் சேர்க்கவும்.
பொரித்த‌ காலிபிளவர் இதழ்கள் சேர்க்கும் முன்
பொரித்த‌ காலிபிளவர் இதழ்கள் சேர்க்கும் முன்

காலிபிளவர் வடைகளைச் சேர்த்த பின்
காலிபிளவர் வடைகளைச் சேர்த்த பின்

கலவையை ஒரு சேரக் கிளறிவிட்டு, அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பினை அணைத்து விடவும்.
கொத்தமல்லி இலைகள் சேர்த்ததும்
கொத்தமல்லி இலைகள் சேர்த்ததும்

சுவையான கோபிமஞ்சூரியன் தயார்.






0 comments:

Post a Comment