< font color="white">All Tips

Monday, 9 April 2018

மத்ஸ்ய கிரிடாசனம்

                                          மத்ஸ்ய     கிரிடாசனம்

                                                     

செய்முறை:
                            வயிற்றுப் பகுதியை கீழே வைத்து கோர்த்த விரல்களைத் தலைக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது காலை பக்கமாக மடக்கி இடது முழங்கையைத் தொடுமாறு வைக்கவும். வலது கால் நேராக நீட்டியிருக்க வேண்டும். தலையை வலது பக்கம் சாய்த்து வலது கையின் மேல்பாகத்தில் வைக்கவும். 

இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின்பு அடுத்த பக்கம் மாறிப் படுக்கவும், மூச்சு சாதாரண நிலையில் இருக்கவும்.

பலன்கள்:
                                            ஜீரண சக்தி அதிகரிக்க செய்யும். நரம்புகள் ஒய்வு பெறுவதோடு நல்ல தூக்கம் வரும். இடுப்புத் தசைகளைக் குறைத்து, நல்ல தோற்றத்தை தருகிறது. உடல்முழுவதும் நல்ல ஒய்வு பெறுகிறது.



0 comments:

Post a Comment