சவாசனம்
செய்யும் முறை:
பலன்கள்:
செய்யும் முறை:
- யோகா மேட்டில் மல்லாந்து படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளவும்.
- கால்களை சற்று அகட்டி வைத்துக்கொள்ளவும். பாதங்களையும் மூட்டுகளையும் முழுவதுமாக ஆசுவாசப்படுத்தவும், கால் விரல்கள் பக்கவாட்டை நோக்கி இருக்கட்டும்.
- உடலின் பக்கவாட்டில் கைகளை வைத்துக்கொள்ளவும். கைகளை உடலிலிருந்து சற்று தள்ளி வைத்துக்கொள்ளவும். கை விரல்களை விரித்து, உள்ளங்கைகளை மேல்நோக்கியபடி வைத்துக்கொள்ளவும்.
- இப்போது மெதுவாக உடல் முழுவதையும் ஆசுவாசப்படுத்தவும். இதைச் செய்ய, உங்கள் கவனத்தை உடலின் பாகங்கள் மீது ஒவ்வொன்றாகக் கொண்டு செல்லவும்.
- முதலில் உங்கள் வலது பாதத்தில் கவனத்தைச் செலுத்தி அதனை ஆசுவாசப்படுத்தவும், பிறகு வலது கால் மூட்டின் மீது கவனம் செலுத்தி ஆசுவாசப்படுத்தவும். இதேபோல் வலது கால் முழுவதும் செய்த பிறகு இடது காலிலும் செய்யவும். மெதுவாக, மேல்நோக்கி நகர்ந்து கைகள், முதுகு, தோள்கள், தலை என ஒவ்வொரு பாகமாக இதேபோல் ஆசுவாசப்படுத்தவும்.
- மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும், இதனால் உங்கள் சுவாசம் உங்களை மேலும் மேலும் ஆசுவாசப்படுத்தும்.
- உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும், உங்கள் புலன்களை விட்டுவிடவும், கவலைகள் எல்லாவற்றையும் மறந்துவிடவும்’உங்கள் உடல், மூச்சு இவற்றின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்தி ஆசுவாசப்படுத்தவும். உடலை தரையில் தளர்வாக வைத்திருக்கவும். தூங்கிவிடக்கூடாது!
- சுமார் 10-20 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் முழுவதுமாக ஆசுவாசமடைந்த உணர்வைப் பெறுவீர்கள், அப்படியே கண்களை மூடியபடியே வலதுபக்கம் திரும்பவம். அதே நிலையில் ஒரு நிமிடம் இருக்கவும். பிறகு, வலது கையை ஊன்றி மெதுவாக எழுந்து உட்காரவும்.
- கண்களை மூடியபடியே சிறிது நேரம் சௌகரியமாக உட்கார்ந்திருக்கவும், பிறகு சில முறை ஆழ்ந்து சுவாசித்து படிப்படியாக உங்கள் சூழலுக்கு கவனத்தைக் கொண்டு வரவும். இப்போது கண்களை மெதுவாகத் திறக்கவும்.
பலன்கள்:
- இந்த ஆசனம் உடலையும் மூளையையும் ஆழமாக ஆசுவாசப்படுத்துகிறது என்று கூறப்படுகின்றது.
- மன அழுத்தத்தைத் தணிப்பதற்கு உதவுகிறது.
- யோகப் பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகு, புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் அளிக்கிறது. இதனால் யோகப் பயிற்சிகளைச் செய்த பிறகு களைப்பாக இருக்கமாட்டீர்கள்.
- இது இரத்த அழுத்தம், மனக்கலக்கம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைக் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read English:
0 comments:
Post a Comment