< font color="white">All Tips

Friday, 6 April 2018

ஞான முத்திரை

                                      ஞான     முத்திரை

                                                        



செய்முறை:
                              
  •  கையின் கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் மிக மென்மையாக தொட்டுக்கொண்டிருக்குமாறும், ஏனைய மூன்று விரல்களும் லேசாக உள்ளே வளைத்துக்கொண்டிருக்குமாறும் வைப்பதே இம்முத்திரையின் அமைப்பாகும்.
  •  இம்முத்திரையை ஆகாயத்தை நோக்கி வைக்கும் போது ஞான முத்திரை எனவும், பூமியை நோக்கி வைக்கும் போது சின் முத்திரை எனவும் கூறப்படுகிறது.
  •  இம்முத்திரையை பத்மாசனத்திலோ அல்லது சுக ஆசனத்திலோ (சம்மணம்) அமா்ந்து கொண்டு இரு கைகளிலும் முத்திரையை அமைத்து கொண்டு தொடையின் மேல் வைத்து வாசிக்காற்றை சீராக செலுத்தவேண்டும். கவனத்தை முத்திரை மற்றும் வாசியின் மீது செலுத்த முழுப்பயனையும் பெறலாம்.

பலன்கள்:
  
  • இம்முத்திரையை 15 நிமிடம் தினமும் மூன்று தடவை செய்து வர முழு பலனை பெறலாம்.
  • இம்முத்திரை அளவுக்கு அதிகமான  தூக்கத்தை குறைப்பதோடு, தூக்கமின்மையையும் போக்கவல்லது.
  • மனம் சம்பந்தபட்ட பிரச்சனைகளான ஹிஸ்டிரியா, மனச்சோர்வு, மனச்சிதைவு மற்றும் கோபம் போன்றவற்றை சரிசெய்ய உதவுகின்றது.
  •  நரம்புகளை உற்சாகப்படுத்துவதோடு, நரம்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளான நரம்பு தளா்ச்சி, செரிபரல் பால்சி (cereberal palsy), மல்டிபிள் க்ளிரோசிஸ் (multiple sclerosis) போன்ற நோய்களை சரிசெய்ய இம்முத்திரை பயன்படுகிறது.
  • நுரையீரல் சளியினால் ஏற்படும் தொந்தரவை சரிசெய்ய இம்முத்திரை உதவுகிறது.
  • நீண்டகாலம் இம்முத்திரையை செய்து வர மனக்கண் திறப்பதோடு ஆன்ம ரீதியான பலனை பெறலாம்.
  • இம்முத்திரையை நீண்டகாலம் செய்துவர புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
  •  உடலில் வாயு தொல்லை உள்ளவா்கள் இம்முத்திரையை தவிர்ப்பது நல்லது.

0 comments:

Post a Comment