< font color="white">All Tips

Friday, 6 April 2018

அபான முத்திரை

                                      அபான        முத்திரை
                                                                         
                             


செய்முறை:
                              கட்டை விரல் நுனியுடன், நடுவிரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.  மற்ற இரு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும்  ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

பலன்கள்:
                              வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ் நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வயிறு,  குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும். பள்ளிச் செல்லும்  மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்து வர, காலையில் மலம் கழிக்கும் பிரச்னை இருக்காது. மந்த குணம், பசியின்மை  நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப்  பிறகு இந்த முத்திரையைச் செய்து வர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்சினைகள் வராது. முத்திரையைத்  தொடர்ந்து செய்து வர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை  போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும். 

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க ,5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம். சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு,  சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்னையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச்சாறு போன்றவற்றை அருந்திய  அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்து முறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம். மூக்கடைப்பு, தலைபாரம்,  தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்.       

Read  English:
                            Apana Mudra

See  More: 
                     முத்திரை            









0 comments:

Post a Comment