< font color="white">All Tips

Thursday, 5 April 2018

பத்மாசனம்

                                         பத்மாசனம்

பத்மாசனம்   செய்யும்  முறை:
                                                                      முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். பின் வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் இடது காலின் தொடை மீது, குதிகால் வயிற்றை தொடும் அளவிற்கு வைக்கவும். இதேப்போல் மற்றொரு காலையும் மடக்கி, வலது காலின் தொடையின் மீது, வயிற்றை தொடும் அளவிற்கு நெருக்கமாக வைக்கவும். பின் நேராக அமர்ந்து, கண்களை மூடி கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, உள்ளங்களை மேல் நோக்கியவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் 5 நிமிடம் மூச்சை உள் வாங்கி வெளியே விட்டவாறு அமர வேண்டும். பிறகு இதேப்போல் கால் மாற்றி மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

பலன்கள்:

                        
  • மூளையை அமைதிப்படுத்தும்
  • நன்றாக பசி எடுக்கும்.
  • உடல் முழுவதும் தளர்ந்த நிலைக்கு வரும்
  • முழங்கால்களையும், முட்டிகளையும் நன்கு விரிக்கும்
  • அடி வயிறு, முதுகுத் தண்டு, சிறுநீரகப் பை ஆகியவற்றிற்கு புத்துணர்வு கொடுக்கும்.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

Read  English:
                            Lotus pose





0 comments:

Post a Comment